TNPSC Thervupettagam

உலக ஹோமியோபதி தினம் – ஏப்ரல் 10 

April 12 , 2020 1630 days 478 0
  • இது ஹோமியோபதியின் நிறுவனரான டாக்டர் ஹாகினிமான் அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
  • டாக்டர் கிறிஸ்டியன் பெரிட்ரிக் சாமுவெல் ஹாகினிமான் என்பவர் ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவர் ஆவார்.
  • இவர் ஹோமியோபதியின் கண்டுபிடிப்பிற்காக சிறப்பாக அறியப் படுகின்றார்.
  • இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “கல்வி மற்றும் மருத்துவ நடைமுறையுடன் ஆராய்ச்சியை இணைத்தல் : மேம்படுத்தப்பட்ட அறிவியல் கூட்டிணைவுகள்” என்பதாகும். 
  • உலக ஹோமியோபதி விழிப்புணர்வு வாரமானது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10 மற்றும் ஏப்ரல் 16 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் அனுசரிக்கப் படுகின்றது.
  • ஹோமியோபதி என்பது இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற மருத்துவ முறைகளில் ஒன்றாக விளங்குகின்றது.
  • இது ஒரு மாற்று மருத்துவ வடிவமாக விளங்குகின்றது.
  • இது மனித உடல் தானே நோய் குணமாதலை ஊக்குவிக்கும் கொள்கையின் அடிப்படையில் செயல்படும் ஒரு மருத்துவ முறையாகும்.
  • ஆயுஷ் ஆனது ஆயுர் வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றின் மருத்துவ சேவைகளைக் கொண்டு உள்ளது.
  • ஹோமியோபதியில் மிகப்பெரிய மருந்து உற்பத்தியாளர் மற்றும் வர்த்தகர்களைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகின்றது.
  • ஆயுஷ் அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆண்டிற்கான அதிகாரப்பூர்வக் கருத்துரு, “பொதுச் சுகாதாரத்தில் ஹோமியோபதியின் நிலையை மேம்படுத்துதல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்